வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் பரீட்சை: கல்வி அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இந்த தீர்மானமானது ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒவ்வொரு பாசாலையிலும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடசாலையின் சுமையை குறைக்கும் வகையில் வருடத்திற்கு ஒரு முறை தவணைப் பரீட்சை நடத்துவதற்கு கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments