ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் 78 ஆவது ஆண்டு நினைவு நாள்
உலகின் முதல் அணுகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில், அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலின் 78 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல் குண்டுத் தாக்குதல் நடந்த ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று காலை 8.15க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1945 ஆம் ஆண்டில் ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்தனர்.
அத்துடன், மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு தாக்குதலில் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments