Header Ads

இம்ரான் கானுக்கு பிணை!


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட ஆயம்  இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன் அவருக்கு பிணை வழங்குவதற்கும் நீதிபதிகள் ஆயம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்தபோது அரச பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் தண்டனையின் விளைவாக, அந்த நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலில் போட்டியிட அவருக்கு ஐந்தாண்டுகளுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு எதிரான தண்டனைகளை இடைநிறுத்தி அவருக்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 



No comments

Powered by Blogger.