பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தால், அருகில் உள்ள பல கட்டடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலை அனுமதி இன்றி இயங்கி வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரே இடத்தில் அதிக பட்டாசுகளை சேமித்து வைத்ததே விபத்துக்கு காரணம் என மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் அந்த ஆலை இயங்கி வந்துள்ளது.
அத்துடன், அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மேற்கு வங்க உணவுத் துறை அமைச்சரும், அப்பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரதின் கோஷ் தெரிவித்துள்ளார்.
No comments