விசா முடிந்தும் பிரித்தானியாவில் தங்கும் வெளிநாட்டவர்கள்!
பிரித்தானியாவிற்குள் பலர் தங்கள் விசா காலாவதியாகியும் தங்கிவிடுகின்றனர் என அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
மாணவர் விசாவில் பிரித்தானியாவுக்கு வந்து, தங்கள் விசா காலாவதியான நிலையில் பிரித்தானியாவிலேயே தங்கியுள்ள சிலரை பிரித்தானிய ஊடகமொன்று பேட்டி கண்டுள்ளது.
இதன்போது குறித்த ஊடகத்தில் பிரித்தானியாவிலேயே தங்கியவர்கள் சிலர் அந்த ஊடகவியலாளரிடம் விளக்கமளித்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களிடம் தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணமத்தினால் சிறிய வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவருவதாகவும், அவர்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுக்கப்படுவதில்லை எனவும், அதற்கு பதிலாக வேலை பார்க்கும் வீட்டில் தனக்கு பழைய உடைகள்,உணவு தருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியா சட்டத்தினை பொறுத்தவரை பிரித்தானியாவில், புலம்பெயர்தல் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சிலர் தங்கள் விசா காலாவதியான பின்னர் தாங்கள் பிரித்தானியாவில் தங்கமுடியும் என்பதையும்,யாரும் தடுக்க முடியாது என்பதினை தெரிந்தே பிரித்தானியாவுக்கு வருகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments