இன்சுலின் இல்லை
நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது எனவும் இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றும் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
No comments