வவுனியா சிறைச்சாலை மூடப்பட்டது
அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 04 கைதிகள் அடையாளம் காணப்பட்டமையினால் கடந்த 25 ஆம் திகதி முதல் வவுனியா சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடவடிக்கை மற்றும் வழக்கு செயற்பாடுகளுக்காக கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 08 ஆம் திகதி வரை சிறைச்சாலை மூடப்பட்டிருக்கும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் 400 இற்கும் அதிக கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments