மலேசியா விமானவிபத்திற்கு முன்னர் தாயிடம் விமானி தெரிவித்த கருத்து!
மலேசியாவின் மத்திய செலான்கூர் மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் விமானி ஒருவர் இறுதியாக தெரிவித்த கருத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விமானத்தின் விமானியாக ஷரூல் கமல் என்பவர் செயற்பட்டுள்ளார்.
விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அவர் தனது தாயுடன் சில நிமிடங்கள் உரையாடியுள்ளார்.
இதன்போது வழமைக்கு மாறாக அம்மாவுடன் அதிக அன்புடன் உரையாடியதுடன், தாயுடன் நீண்ட காலம் வசிக்க விரும்புகிறேன் எனவும் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், விமானத்திற்கு செல்வதற்கு முன்னர் 'ஐ லவ் யு சோ மச் மமா' என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
குறித்த விமானியின் தாய் அன்பு அனைவரையும் நெகிழச் செய்துள்ளதுடன் கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த 8 பேரும் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த இருவருமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் இரண்டு விமானிகளும் 6 பயணிகளும் பயணித்துள்ளனர்.
அதேநேரம் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments