Header Ads

பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் நீக்கம்: இந்திய உயர் நீதிமன்றம் அதிரடின் தீர்மானம்!


இந்திய உயர்நீதிமன்றத்தின் புதிய கையேட்டின்படி பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகள் சிலவற்றிற்கு பதிலாக வேறு வார்த்தைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் நீதிமன்றங்களின் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளன.

இந்தநிலையில் இது போன்ற வார்த்தைகளுக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 'தவறிழைத்த பெண்', 'முறை தவறிய பெண்'களை பொதுவான வார்த்தையாக பெண் என்றே குறிப்பிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

'விபசாரி' என்ற வார்த்தைக்கு பதிலாக பாலியல் தொழிலாளி என்றும், கள்ள உறவில் ஈடுபட்ட பெண்' என்பதை திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்ட பெண்' என்றும், தகாத உறவு' என்பதை திருமணத்தை மீறிய உறவு என்றும் அழைக்க வேண்டும்.

வல்லுறவை 'பலாத்காரம்' என்றும் குறிப்பிடவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பப் பெண் என்ற ஹவுஸ்வொயிப்' என்பதை ஹோம் மேக்கர்' என்றும், 'முதிர்கன்னி' என்பதை திருமணமாகாதவர்' என்றும், சோம்பேறி' என்பதை வேலை இல்லாதவர் என்றும், திருமணமாகாமல் தாயானவரை தாய் என்றே அழைக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.