விமான விபத்து: விமானிகள் மூவர் உயிரிழப்பு
உக்ரைனின் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 3 விமானப்படை விமானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தின் போது கெய்வ் மீதான போரில் பங்கேற்று மிகவும் பிரபலமான ஆண்ட்ரி பில்ஷிகோவ் என்ற விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு உக்ரைன் பகுதியில் பறந்து கொண்டிருந்த இரண்டு எல்-39 பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது என உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் நேற்றைய தினம் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி காணொளியொன்றில் ஊடான உரையில் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி, இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உக்ரைனின் சுதந்திர வானத்தை பாதுகாத்த எவரையும் தமது நாடு ஒருபோதும் மறக்காது எனவும் கூறியுள்ளார்.
No comments