இரண்டாவது முறையாகவும் சிம்பாப்வேயின் ஜனாதிபதியானார் இமேர்சன்!
சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி இமேர்சன் நன்கக்வா இரண்டாவது முறையாக தெரிவாகியுள்ளார்.
52.6 சதவீதமான வாக்குகளை பெற்று அவர் தெரிவாகியுள்ள போதிலும் பரந்த அளவில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் சர்வதேச தரத்தை கொண்டிருக்கவில்லை என தேர்தலை கண்காணிக்கும் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சிரேஷ்ட அரசியல்வாதியான ரொபேட் முகாபேக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பையடுத்து இவர் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்றார்.
இதேவேளை, சர்வதேச ரீதியாக பெரும் பண வீக்கம், வறுமை, வேலையில்லா பிரச்சினை மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் சிம்பாப்வே மக்கள் வாழ்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments