எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து: ஒருவர் பலி!
ருமேனியாவில் பெட்ரோலிய எரிவாயு நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளார்.
ருமேனியாவின் - புக்கரெஸ்ட் பகுதி அருகே பெட்ரோலிய எரிவாயு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த எரிவாயு நிலையத்தில் நேற்று இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டது.
எரிவாயு நிலையத்தில் முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பிறகு, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது.
இதனால் 300 மீற்றர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. மாலையில் இரண்டாவதும் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 33 பேர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments