நீரில் மூழ்கி இளைஞன் பரிதாபமாக பலி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞன் அதே தோட்டத்தில் வசிக்கும் மேலும் இரு இளைஞர்களுடன் சென்ற போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து மீட்டுள்ளனர்.
No comments