வவுனியா இரட்டை கொலை: சந்தேகநபரின் சகோதரர் மீது தாக்குதல்!
வவுனியா - தோணிக்கல் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தவசிகுளம் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments