மீனாவுக்கு கிடைத்த கெளரவம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ணத்துடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கல் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை மீனா, விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று பிரான்ஸ் தலைநகர் பரீஸில் உள்ள உலக அதிசயமான ஈபிள் கோபுரத்துக்கு கீழே நின்று உலகக் கிண்ணத்தை நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார்.
No comments