கடல் நீரை யாழ்.மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கு திட்டம்
கடல் நீரை சுத்திகரித்து நாளாந்த பயன்பாட்டிற்கான நீரை பெற்றுக்கொள்ளும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 60 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 இலட்சம் பேருக்கு நீர் வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அடுத்த வருட முற்பகுதியில் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தில் நீர் குழாய்களை பொருத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு விலைமனுக்களை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் விலைமனு கோரப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
No comments