நிலத்தடி நீரில் மாற்றம் காணப்படுமாயின் உடனடியாக பரிசோதிக்குமாறு அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரின் சுவை, மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் காணப்படுமாயின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் பரிசோதிக்குமாறு குறித்த சபை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு, புத்தளம், அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் பரிசோதனை நிலையங்களில் நீர் மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments