Header Ads

நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல்!


நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காத காரணத்தால்  பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை கூட்டப்பட வேண்டும் என சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

எனினும், தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாமல் போயுள்ளது.

குறித்த சபையின் தலைவராக செயற்பட்ட பி.விஜேரத்ன கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனடிப்படையில், புதிய தலைவராக ஜயந்த விஜேரத்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை அரசியலமைப்பு பேரவை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, நலன்புரி நன்மைகள் சபையினால் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் சமுர்த்தி பயனாளர்கள் பலரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர், கமல் பத்மசிறி கருத்து தெரிவிக்கையில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 



No comments

Powered by Blogger.