Header Ads

பா.ஜ.கவில் இணைந்தார் நடிகை ஜெயசுதா!


நடிகையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயசுதா பா.ஜ.கவின் தெலங்கானா மாநில தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.

தமிழ் திரையுலகில் 1970 ஆம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் இயக்குநர் பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’, ‘அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதன்பின் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை ஜெயசுதா சேர்ந்தார். இதன் பின் அந்த கட்சியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.