'கானுன்' புயல் தாக்கம்: 500 விமான சேவைகள் இரத்து!
ஜப்பானின் தெற்கு பகுதியில் உருவாகியுள்ள கானுன் என்ற புயல் காரணமாக அங்கு 500 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு, 198 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments