சீன ஆய்வு கப்பல் இலங்கை வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி
Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
வௌியுறவு அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறித்த கப்பலுக்கு இவ்வாறு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
நாரா எனப்படும் இலங்கையின் நீர்வள மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும் ருஹூணு பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஆய்வுக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Shi Yan 6 கப்பல் நாட்டிற்கு வருவது இது முதல் தடவையல்ல.
இந்த கப்பல் கடந்த வருடம் ஏப்ரல் 20 ஆம் திகதியும் இலங்கைக்கு வந்திருந்ததுடன், அதன்போது அந்த கப்பலில் இருந்தவர்கள் 10 நாட்கள் தங்கியிருந்தனர்.
கடந்த சில வருடங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவ்வாறான கப்பல்கள் தொடர்பில் பார்க்கும் போது பெரும்பாலான கப்பல்கள் சீனாவிற்கு சொந்தமான ஆய்வுக் கப்பல்களாகும்.
Shi Yan 6, Shi Yan 1, Shi Yan 3, Xiang Yang Hong 3, Xiang Yang Hong 18, Xiang Yang Hong 1, Xiang Yang Hong 6, and Xiang Yang Hong 19 ஆகிய கப்பல்கள் இவற்றில் முக்கியமானவையாகும்.
No comments