விஜய் தான் எனக்கு பிடித்த நடிகர்: கிரிக்கெட் வீரர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரர் ரஹானே.
இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடினார்.
இந்தநிலையில், தமிழக ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் ரஹானே செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த செவ்வியில் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு ரஹானே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார்.
இதன்போது, ரஹானேவுக்கு பிடித்த நடிகர் யார் என நெறியாளர் கேட்ட பொழுது, ரஹானே விஜய் என பதிலளித்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
No comments