🔴 பரிசில் - மின்சார ஸ்கூட்டர்களினால் இவ்வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள்
தலைநகர் பரிசில் மின்சார ஸ்கூட்டர்களினால் (Trottinettes) இவ்வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு இளைஞர் யுவதிகளிடம் தற்போது புதிய மோகப்பொருட்களாக மாறியுள்ள இந்த சிறிய அளவிலான மின்சார ஸ்கூட்டர்கள், பெரும் விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன. அதை தடை செய்வதா இல்லையா என்பது தொடர்பாக விவாதங்கள் ஒருபக்கம் எழுந்துள்ள நிலையில், பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களைச் சேர்த்து இவ்வருடத்தின் முதல் அரை ஆண்டில் 287 விபத்துக்கள் இந்த மின்சார ஸ்கூட்டர்களினால் இடம்பெற்றுள்ளது. இவற்றில் தலைநகர் பரிசில் மட்டும் 135 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
தலைநகர் பரிசில் 153 பேர் உட்பட 316 பேர் மொத்தமாக இந்த விபத்துக்களில் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 742 விபத்துக்கள் பரிசிலும் அதன் புறநகரங்களிலும் பதிவாகியிருந்தன. இதில் மொத்தமாக 811 பேர் காயமடைந்தும் 8 பேர் பலியாகியும் இருந்தனர்.
No comments