13 லட்சம் பெண்கள் மாயம்: இந்தியாவில் அரங்கேறும் கொடுமை!
இந்தியாவில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுமிகள் உள்ளிட்ட 13 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்ற விடயம் அம்பலமாகியுள்ளது.
2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 13.13 லட்சத்துக்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் இருக்கிறது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 2019 முதல் 2021 வரை 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், அதற்குக் குறைவான வயதுடைய 2,51,430 பெண்களும் காணாமல் போயுள்ளனர். இதற்கமைவாக குறித்த 3 ஆணடுகளில் 13 லட்சத்து 13 ஆயிரத்து 81 பெண்கள் காணமல் போயுள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் இந்தத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 2019 முதல் 2021 வரை 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளுமாக ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 414 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து 1,56,905 பெண்களும் 36,606 சிறுமிகளுமாக ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 511 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 8,617 பெண்களும் 1,148 சிறுமிகளுமாக 9 ஆயிரத்து 765 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரியவந்துள்ளது.
No comments