விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் தாயார் மரணம்
திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த தளபதி புலேந்திரனின் தாய் சுந்தராம்பாள் குணநாயகம் தமிழகத்தில் மரணமடைந்துள்ளார்.
அவருடைய இறுதி வணக்க நிகழ்வில் முன்னணி பாடகர் தேனிசை செல்லப்பா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் மூத்த தளபதி புலேந்திரன், இலங்கை கடற்பரப்பில் பயணித்த வேளை இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு பிடிப்பட்டவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு இலங்கை – இந்திய படைகள் மேற்கொண்டிருந்த முயற்சியின் போது, 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு அவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments