Header Ads

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை


முல்லைத்தீவு-தண்ணிமுறிப்பில் தமிழ் கடற்றொழிலாளர்களின் 4 படகுகள் அடையாளம் தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும், தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடற்றொழிலாளர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டுவருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் கடற்றொழிலாளர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.