Header Ads

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி!

 


பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள இராணுவச் சாவடியில் கட்டுமான பணிக்கு செல்லும் போது தொழிலாளர்கள் சென்ற மகிழுந்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. 

இந்த குண்டு வெடிப்பில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குண்டுவெடிப்பில் பலியானவர்கள் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள மக்கின் மற்றும் வானா தெஹ்சில் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 




No comments

Powered by Blogger.