எரிவாயு விலையில் இன்று திருத்தம்
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, எரிவாயுவின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
உலக சந்தையில் தற்போது 87 டொலருக்கும் அதிகமான விலையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.
உலக சந்தையின் விலை மாற்றங்களுக்கேற்ப, இலங்கையில் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது.
No comments