பயணப்பையில் சிறுமியை கடத்தியவர் கைது!
பிலிப்பைன்ஸில் சிறுமி ஒருவரை பயணப்பையில் வைத்து நபர் ஒருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது, சிறுமி வீட்டில் இல்லாததால் சீ.சீ.ரி.வியை பரிசோதித்துள்ளார்.
இதன்போது, சிறுமியை நபர் ஒருவர் பயணப்பையில் வைத்து கடத்தி செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டது. பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments