Header Ads

களஞ்சியசாலையில் தீப்பரவல்: பல மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள்!


ஹோமாகமவில் கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 அளவில் குறித்த தொழிற்சாலையின் இராசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

கொழும்பு கோட்டை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் ஹொரணை நகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் குறித்த பணிகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், குறித்த தீ விபத்தினால், தொழிற்சாலையின் இரண்டு கட்டடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, குறித்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வளி மாசடந்துள்ளமையால், முகக் கசவங்களை அணியுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  



No comments

Powered by Blogger.