கடல் நீச்சல் போட்டி; யாழ் பெண்கள் சாதனை!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கடல் நீச்சல் போட்டியில் பங்குபற்றிய பெண்கள் போட்டி தூரத்தை நீந்தி நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
வடமராட்சி - இன்பருட்டி காண்டீபன் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட கடல் நீச்சல் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளதன் மூலம் சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதனை குறித்த பெண்கள் நிரூபித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று (17) வியாழக்கிழமை இரு பிரிவுகளாக நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.
பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்குபற்றி போட்டி தூரத்தை நீந்தி நிறைவு செய்து முதல் மூன்று இடத்தினையும் பெற்றுக் கொண்டதன் ஊடாக சாதிப்பதற்கு வயது உள்ளிட்ட காரணிகள் தடையில்லை என்பதனை நிரூபித்துள்ளனர் இன்பர்சிட்டி வாழ் பெண்கள்.
போட்டி தூரமான ஒரு கடல் மைல் தூரத்தை கடலிலே நீந்தி இன்பர்சிட்டியை சேர்ந்தவர்களான சிறிமுருகன் அனுரூபா (வயது-40), மதனதாஸ் தர்சினி (வயது-46) மற்றும் செல்வக்குமார் மனோன்மணி (வயது-56) ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் முறையே பெற்றுக்கொண்டனர்.
மூவரும் திருமணமாகி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை கண்ட நிலையிலும் கடல் அலைகளுக்கு சவால் விடும் வகையில் நீந்தி சாதனை படைத்துள்ளமை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதேவேளை, திறந்த நிலை போட்டியாக ஆண்களுக்கான கடல் நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இருந்து இன்பருட்டி வெள்ளைவான் கடற்பகுதி வரையான சுமார் இரண்டு கடல் மைல் தூரத்தை நீந்தி உடுத்துறை பாரதி விளையாட்டு கழகத்தை சேர்ந்த உதயகுமார் சாரங்கன் (வயது-16) முதலிடத்தையும், இன்பருட்டி காண்டீபன் விளையாட்டு கழகத்தை சேர்ந்தவர்களான ரவிதாஸ் பத்மாகரன் (வயது-33) மற்றும் நவரத்தினராசா ராஜேஸ்வரன் (வயது-32) ஆகியோர் முறையே 2வது, 3வது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
மூவரும் திருமணமாகி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை கண்ட நிலையிலும் கடல் அலைகளுக்கு சவால் விடும் வகையில் நீந்தி சாதனை படைத்துள்ளமை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
No comments