தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!
தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக கடற்றொழிலார்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றனர். இதனை தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மீதான இலங்கையரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது எனவும் கடந்த 21 ஆம் திகதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளன என ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டுமென்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.
No comments