Header Ads

தங்கம் விலை திடீர் அதிகரிப்பு!


இலங்கையில் தங்கம் விலை இன்று திடீர் அதிகரிப்பை சந்தித்துள்ளது.

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று (23) அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 154,000 ரூபா என்ற நிலையில் தொடர்ந்து வந்தது.

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன. 

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாவாக காணப்படுகிறது. 



No comments

Powered by Blogger.