Header Ads

இலங்கையர்கள் பலர் இந்தியாவில் கைது: சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை

 நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்செயல் தொடர்பில்  இலங்கையை சேர்ந்த 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் திரைதுறையில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ஆதிலிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

'சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை'' என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கில் இது வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.