முட்டை விற்பனையில் மோசடி: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
லங்கா சதொசவிலிருந்து 35 ரூபாவிற்கு இந்திய முட்டைகளை கொள்வனவு செய்து அவற்றை சில வர்த்தகர்கள் 45 முதல் 50 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்து வருவதாக அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குளிரூட்டியில் வைக்கப்படாவிட்டால் இந்த முட்டைகள் 48 மணித்தியாலங்களில் பழுதடைந்துவிடும்.
எனவே, வர்த்தகர்கள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவு செய்து விற்பனை செய்வதால் சாதாரண நுகர்வோருக்கு எந்த பயனும் ஏற்படாது என அந்த சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
No comments