Header Ads

திடீர் காய்ச்சலால்: குடும்பஸ்தர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நாராயணசாமி கோவர்த்தனன் என்கிற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




No comments

Powered by Blogger.