Header Ads

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்திற்கு மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவானை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து வீடுதிரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடி சென்றபோது குளத்துக்கு அருகாமையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  

இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.