'பழங்குடியின மக்களை நேசிக்கிறேன்'
பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று செல்கிறார்.
டில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற அவர், அங்கிருந்து வாகனத்தில் சென்று உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேநீர் அருந்தினார்.
பின்னர் கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு சென்றார். அங்கு வந்த அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கருத்து தெரிவிக்கையில், நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என்று தெரிவித்துள்ளார்.
No comments