Header Ads

ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்தினால் ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு


 உக்ரைன் - ரஷ்யா போர் நடவடிக்கைக்கு மத்தியில் ஈரானுக்கு அமெரிக்கா சலுகையொன்றினை அறிவித்துள்ளது. 

இதன்படி, ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்தினால் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் அதன் அதிநவீன ஆளில்லா தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு விற்பனை செய்து வரும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவிற்கு ஈரான் செய்து வரும் ட்ரோன் விற்பனையை நிறுத்தினால், அதற்கு பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கப்படும் ந  அமெரிக்கா சலுகை வழங்கியுள்ளது.

இதனுடன் தெஹ்ரான் மாஸ்கோவிற்கு ஆளில்லா ட்ரோன்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், ட்ரோன் தொடர்பான உதிரிபாகங்களையும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என வொஷிங்டன் வலியுறுத்தியுள்ளது. 



No comments

Powered by Blogger.