Header Ads

கண் அயர்ந்த சாரதி: மரத்துடன் மோதி பற்றி எரிந்த கார்!


ஹொரவப்பொத்தானை - மதவாச்சி பகுதிக்குட்பட்ட 4 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரொன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று(21) அதிகாலை மதவாச்சி 4ஆம் மைல்கல் பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதை அடுத்து தீக்கிரையாகியுள்ளது.

ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

கார் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே விபத்திற்கான காரணம் என மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காரில் பயணித்த  இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments

Powered by Blogger.