Header Ads

600 விரிவுரையாளர்கள் வெளியேற்றம்


கடந்த 6 மாதங்களில் 600 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அரச பல்கலைக்கழக முறைமையும் படிப்படியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது எனவும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வருட காலப்பகுதியில், 274 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 842 வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.  



No comments

Powered by Blogger.