பனிச்சங்குளம் பகுதியில் விபத்து: மூவர் உயிரிழப்பு
ஏ 9 வீதியில் மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் 38, 46 மற்றும் 58 வயதுகளை உடைய முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வானொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்பக்கத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த லொறி அதற்கு முன்னாலிருந்த மற்றுமொரு லொறியின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments