Header Ads

16 வயது சிறுவனை திருமணம் செய்த 41 வயது பெண்!


இந்தோனேஷியாவை சேர்ந்த 41 வயது பெண் 16 வயது சிறுவனை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அங்குள்ள மேற்கு கலிமந்தன் பகுதியை சேர்ந்தவர் மரியானா. 41 வயதான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே வசித்து வருபவர் லிசா. இவரது 16 வயது மகன் கெவின் தின்பண்டங்கள் வாங்குவதற்காக மரியானாவின் கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரியானா கெவின் மீது தீவிர காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் தன்னை விட 25 வயது சிறியவனை திருமணம் செய்ய அவரது தாயார் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் மரியானாவுக்கு ஏற்பட்டது.

ஆனால் தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்தோனேஷியா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 19 ஆகும். எனவே கெவின் 19 வயதாகும் வரை இருவரும் தனியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.