Header Ads

ஹிமாச்சல் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு: 338 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!


இந்தியாவின் ஹிமாச்சல் மாநிலத்தில் நிலவும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு இதுவரை 338 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 38 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என  இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தினால் இதுவரை 8 கோடி இந்திய ரூபாவுக்கு அதிகமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனமழை காரணமாக நிலச்சரிவு, திடீர் வெள்ளப் பெருக்கு, பயிர்ச் சேதம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன், பாரி, நைனிடால், சம்பாவாட், பாகேஸ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்தும்  அதிகனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.