வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!
அநுராதபுரம் - விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்,.
பாரவூர்தி ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த 36 வயதான பெண்ணும், 9 வயதான அவரது மகளும் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றது.
No comments