வெளியேற்றம் ஆரம்பம் - 262 பேருடன் Niger-ல் இருந்து பரிசை வந்தடைந்த விமானம்
Nigerல் உள்ள பிரெஞ்சு மக்களை வெளியேற்றும் பணி செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்திருந்தது. முதல்கட்டமாக 262 பேருடன் விமானம் ஒன்று பரிசை வந்தடைந்தது.
Niger-ன் தலைநகர் Niamey இல் இருந்து புறப்பட்ட Airbus A330 விமானத்தில் அவர்கள் பரிசை வந்தடைந்தனர். பெண்களும், குழந்தைகளும் அக்குழுவில் இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine Colonna தெரிவித்தார்.
Nigerல் இருந்து வெளியேறுவதற்கு தயாராக 600 பேர் அங்கு காத்திருந்த நிலையில், முதல்கட்டமாக அங்கிருந்து 262 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெளியேற்றத்தின் போது பாதுகாப்பு வழங்குவதற்காக 50 பிரெஞ்சு இராணுவத்தினர் Niamey விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments