Header Ads

220 மீற்றர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலியான பிரெஞ்சு புகைப்படக்கலைஞர்



பிரெஞ்சு புகைப்படக்கலைஞர் ஒருவர் 220 மீற்றர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

உலகில் உள்ள உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஏறி அங்கிருந்து புகைப்படங்கள் எடுக்கும் "Rémi Enigma" எனும் கலைஞரே பலியாகியுள்ளார். 



கடந்த வியாழக்கிழமை அவர் ஜப்பானின் ஹொங்காங் நகரில் உள்ள Tregunter Tower கட்டிடத்தில் ஏறியுள்ளார். அங்கிருந்து புகைப்படம் எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார். கட்டிடத்தின் 68 ஆவது தளத்தில் இருந்து (கிட்டத்தட்ட 220 மீற்றர் உயரம்) அவர் தவறி விழுந்துள்ளார்.

Rémi Lucidi எனும் இயற்பெயர் கொண்ட Rémi Enigma சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். அவரது புகைப்படங்கள் பலராலும் பாராப்பட்டு வந்த நிலையில், 30 வயதில் அவரது மரணம் அவரது ரசிகர்களினை பெரும் சோகத்தினை ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.