தொடருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தொடருந்து தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், குறித்த விபத்தில் 80 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கராய்ச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச்சென்ற தொடருந்தே தடம்புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்தில் காயமடைந்த நபர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நவப்சா பகுதியில் காணப்படும் வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments