பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு!
மொரோக்கோவின் மத்திய மாகாணமான அசிலாலில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாராந்த சந்தைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக பேருந்து ஒன்று வளைவுப்பகுதியொன்றில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில், தற்போது, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மொரோக்கோவின் குறித்தப் பகுதியில் தொடர்ந்தும் அதிக விபத்துக்கள் பதிவாகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments