இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இருவர் பலி
தங்காலை குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நாக்குளுகமுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்த இருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியாகவில்லை எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, திக்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட போதகந்த பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
No comments